Tuesday, December 7, 2010

சோரியாசிஸ் - ஆழமான சில கருத்துரைகள் மற்றும் நான் பரிந்துரை செய்யும் ஒரு மருத்துவர்:

சோரியாசிஸ் பற்றிய இதுவரை பல தகவல்கள் நாம் மேலோட்டமாக மட்டுமே பார்த்து வந்தோம்.இனி இதை பற்றி விரிவாக பார்ப்போம்.இதுவரை வெட்பாலை என்பது சோரியாசிஸ் குணம் ஆக்க கூடிய மருந்து என்று கூறி இருந்தேன்.நேற்று என்னுடைய நண்பரிடம் இதை பற்றி சிறிது விரிவாக பேச நேர்ந்தது.அதை பற்றி கூறுகிறேன்.சோரியாசிஸ் பொறுத்தவரை ஆரம்ப நிலையான சிறிய தழும்பில் இருந்து முற்றிய நிலையான குளத்தில் தேங்கி இருக்கும் பாசம் போல இது பெருகும்.இதில் பல விசயங்களை பார்த்த பின்பே நாம் வெட்பாலை எண்ணெயை உபயோகிக்கலாம்.

முதலில் வெட்பாலை என்பது செதில்களில் மட்டுமே செயல் புரிய கூடியது.இது ஆரம்ப கால சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு குணம் ஆகாது.ஏன் என்றால் ஆரம்ப கால சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு செதில்கள் இருக்காது.தழும்பு மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக கூடும்.இங்கே ஒரு விசயத்தை நான் கூற வேண்டும்.என்னவென்றால் சிலர் ஆரம்ப கால சோரியாசிஸ் எடுத்து கொண்டு சந்தையில் விற்கும் சில எண்ணெய்கள் அல்லது கிரீம்கள் அவர்களாகவே சிகிச்சைக்காக எடுத்து கொள்கின்றனர்.இது குணம் ஆகும் தான் இப்போது என்றால் நீங்கள் இதனை உபயோகித்து கொண்டு இருக்கும் வரை தான்.எடுத்து காட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் சிறு குழந்தையை தட்டி கொடுப்பது போல் தான் இந்த மருந்துகளின் தன்மை இருக்கும்.அது போக சோரியாசிஸ் என்பது வெளியில் உள்ள தோலில் மட்டுமே படர கூடிய ஒன்று அல்ல.இந்த அடுத்த அடுத்த சோரியாசிஸ் நிலைகளில் ரத்தத்தில் கலந்தே இருக்கும்.அதனால் இந்த கிரீம்கள் உபயோகமற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.



அடுத்ததாக சோரியாசிஸ் இருப்பவர்களின் வயது பற்றியும் பார்க்க வேண்டும்.ஏன் என்றால் அவர்களுடைய மெட்டபாலிசம்(நம் உடலில் நடக்கும் சில ரசயான மாற்றங்கள்) மற்றும் வெள்ளை அணுக்களின் செயல் புரிதல்களையும் பார்க்க வேண்டும் ஏன் என்றால் இதனுடைய வேகத்தினை பொறுத்தே மருந்தின் வேகமும் செயல்படும்.அது போக ஒவ்வாமை என்ற ஒரு விசயமும் உண்டு.அனைவரின் உடல் நிலைகளும் ஒன்றாக இருக்காது அல்லவா?அதனால் மருந்தின் செயல் புரிதல்களிலும் வேகம் மற்றும் தாமதம் ஏற்படும்.


அதன் பின் இப்போது மிக முக்கியமான விசயத்திற்கு வருவோம்.இதுவரை நான் பலரிடம் பேசி மற்றும் நிஜ வாழ்கையில் தெரிந்து கொண்ட விசயத்தினை பற்றி கூறிவந்தேன்.நானாகவே மருந்துகளையும் எனக்கு தெரிந்த சில அறிவுரைகளையும் கூறி வந்தேன்.என்னுடைய லட்சியமே எந்த ஒரு மருத்துவரையும் அணுகாமல் பதிவின் மூலமாகவே கருத்துக்களை கூறுவது தான்.ஆனால் இதில் உண்மையான விசயம் என்ன வென்றால் சோரியாசிஸ் உட்மருந்தும் தேவைப்படுகின்றது.அது போக அனைவர்க்கும் ஒரே மாதிரியான சோரியாசிஸ் நிலைகள் இருப்பதில்லை.அதே போல் சிலருக்கு சோரியாசிஸ் அறிகுறிகள் கண்டு கொள்ள முடிவதில்லை.



இருப்பினும் சோரியாசிஸ் உட்கொள்வதற்கான மருந்துகளின் செயல்முறைகளை கூற என்னுடைய சித்தா மறுத்து விட்டார்.அவர் கூற மறுத்ததன் காரணங்கள் எனக்கும் சரியாக படவே முதல் முறையாக அவரினை பரிந்துரை செய்ய முன் வந்துள்ளேன்.அவர் கூறிய காரணங்கள்.

*முதலில் அவருடைய மருத்துவ பார்முலாவினை தெரிவித்தால் அதே பார்முலாவினை உபயோகபடுத்தி சந்தையில் அதே மாதிரியான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு விடும்.

*அடுத்ததாக என்னால் அவருடைய மருத்துவ தொழில் பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு.

*இந்த பதிவினை சோரியாசிஸ் உள்ளவர்கள் மட்டுமே படிப்பது இல்லை.சித்தா மருத்துவர்களோ அல்லது இதனை பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்தவர்கள் இதே போன்று மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபடலாம் அல்லவா?

சரி இப்போது அவருடைய விவரம் :



பெயர் : சுந்தர் (அவருடைய தளம் இங்கே)

தொழில் : மருத்துவர் - சோரியாசிஸ் குணப்படுத்துதல்(இதுவரை இறுதிகட்ட நிலையில் உள்ளவர்களை கூட திறமையாக குணப்படுத்தி உள்ளார்.இவருடைய சிகிச்சையில் சோரியாசிஸ் மீண்டும் வந்தது இல்லை.அது போக குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் என்ன வென்றால் மிக குறைந்த அளவில் மட்டும் லாபம் வைத்து இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்).

தொலைபேசி எண் :9994063531 ( இந்த பதிவின் மூலமாக வருபவர்களுக்கு நான் பொறுப்பு என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளேன்.என்னை எவ்வாறு நீங்கள் நம்புகின்றீர்களோ அதே போல் இவரையும் நீங்கள் நம்பலாம்.


நன்றி
: cuddalore-news.blogspot.com



என்னுடைய தளத்தினை கடலூர் மாவட்ட செய்தி தளத்தில் பரிந்துரை செய்து உள்ளனர்.நன்றி கடலூர் செய்திகள்.நான் மீண்டும் பதிவினை எழுதுவதற்கு வாசகர்கள் ஆகிய நீங்களும் கடலூர் செய்திகளும் தான்.அவருடைய பதிவில்,

// வலைப்பூ முகவரி : http://jayonline.blogspot.com/

தோழி மதுரை பொண்ணு அவர்களின் சோரியாஸ் நோய் பற்றிய தகவல் கொண்ட சமூக வலைத்தளம். சோரியாஸ் நோய் பற்றிய கீழ்காணும் அனைத்து தகவல்களையும் தலைப்பு வாரியாக இந்த வலைதளத்தின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.

ஆரோக்கிய வழிகள்
உண்மையான காரணங்கள்
உண்மையான மருந்து
உருவாகும் சூழ்நிலை
ஏமாத்து வேலைகள்
சோரியாசிஸ் ஆண்களுக்கு
சோரியாசிஸ் குணமாக
மருத்துவ குழப்பங்கள்
முதல் பதிவு
லிக்குவிட் பாரபின்

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

இது போன்ற சமூக வலைதளங்களை வரவேற்போம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். //

என்னுடைய பதிவு இங்கே

இந்த பதிவு நம்முடைய அனைத்து சோரியாசிஸ் நண்பர்களுக்கும் சென்று அடைய மறக்காமல் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் வோட்டு போட்டு விட்டு இதை பற்றி உங்களுடைய நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.உங்களுடைய சந்தேகங்களை தயக்கம் இன்றி மறுமொழியில் கேட்கலாம்.

Thursday, December 2, 2010

சோரியாசிஸ் - குளிர் காலம் தொடங்கி விட்டது.இதை பார்த்து விட்டு போங்கள்.

தற்போது மழை காலம் தான் என்றாலும் குளிர் அதிகமாக உள்ளது.அதனால் குளிர் காலத்திற்கு சில கருத்துரைகளை பார்க்கலாம்.சோரியாசிஸ் பொறுத்தவரை கோடை காலம் என்றாலும் சரி குளிர் காலம் என்றாலும் சரி இந்த இரண்டு காலங்களிலும் கூடும்.அதனால் உங்கள் உடம்பை இந்த குளிர் காலத்தில் இருந்த பாதுகாத்து கொள்ளுங்கள்.இந்த குளிர் காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் குளிர் காலத்திற்காக உபயோகப்படுத்தும் கிரீம்களை முதலில் தவிருங்கள்.அப்படி இருக்க என்னால் முடியவில்லை என்று சொல்பவர்கள் லாக்டோ காலமின்(Lacto calamine ) உபயோகித்து கொள்ளலாம்.வேறு வகையான கிரீம்களோ அல்லது முகத்திற்கு போடப்படும் பவ்டர்களோ வேண்டாம்.இது உங்களுக்கு இருக்கும் சோரியாசிஸ் மேலும் அதிகப்படுத்தலாம் அல்லது வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.



அடுத்ததாக சுடு தண்ணீரில் அடிக்கடி நீராவி பிடியுங்கள்.இது உங்களுக்கு அதிக குளிர்ச்சியை போக்குவதோடு சோரியாசிஸ் உருவாகும் கெட்ட நீரை வெளியேற்றும்.அதனோடு தோல் மிருதுவாகி அதன் கடின தன்மையை போக்கும்.

சோரியாசிஸ் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் ஆனவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாகி காதின் துகளின் உள்ளே படர்ந்து இருக்கும்.அதனால் அவர்கள் அரிப்பு எடுக்கும் போது காது குடையும் பட்ஸ் உபயோகிப்பர்.இப்படி செய்ய கூடாது.இது அப்போதைக்கு நிவாரணம் குடுத்தாலும் பின்னர் காதில் அதிக வலி எடுக்கும்.இதற்கு பதிலாக சூடு படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் சிறிது ஓமம் போட்டு அதனை சிறிது மட்டும் சூடு இருக்கும் போது வடிகட்டி விட்டு அதனை காதினில் ஊற்றி கொள்ளலாம்.இது காதினில் இருக்கும் சோரியாசிஸ் மேலும் உள்ளே பரவாமல் எண்ணெய் பசையுடன் வைத்து கொள்ளவதோடும் மட்டும் இல்லாமல் காது வலியும் சென்று விடும்.



சென்ற பதிவில் காலை மற்றும் மாலையில் சூரிய வெளிச்சத்தில் யோகா செய்தால் நல்லது என்று கூறி இருந்தேன்.இப்போது மழை காலம் என்பதால் சூரிய வெளிச்சம் நமக்கு கிடைக்காது.அதனால் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலை நான்கு மணியில் இருந்து ஐந்து மணி வரை நாம் செய்யலாம்.ஏன் இதற்கு இந்த மணிக்கு பின்னால் யோகா செய்தால் என்ன என்று நீங்கள் கேக்கலாம்.நீங்கள் இந்த நேரத்தில் யோகா செய்வதால் உங்களுடைய மனதினை ஒருமுகபடுத்துவது எளிது.நீங்கள் வேண்டுமானால் வேறு நேரத்தில் யோகா செய்து பாருங்கள்.உங்களுக்கே தெரியும்.

பின் குறிப்பு:
நான் ஏன் பதிவு இதனை நாளாக பதிவு எழுதவில்லை என்றால் ஏதோ மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றை மீண்டும் நான் எழுதுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.அதனால் எழுதவில்லை.மீண்டும் சில சோரியாசிஸ் நண்பர்கள் கேட்டு கொண்டதால் எழுதுகின்றேன்.

ஒரு சந்தோசமான செய்தி:

என்னுடைய சித்தா நண்பர் ப்ளாக் ஆரம்பித்து உள்ளார்.வெட்பாலையின் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று இன்னும் ஆழமாக கூறி உள்ளார்.இங்கே சென்று பார்த்து கொள்ளுங்கள்.

http://villiputturan.blogspot.com/2010/11/blog-post_30.html

Wednesday, November 17, 2010

சோரியாசிஸ் சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:

சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம்.

முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமா வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.




அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.

காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கத்தாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).



அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்.(தொடரும்).

Saturday, November 13, 2010

லிக்குவிட் பாராபின் - சில அதிர்ச்சி தகவல்களின் தொடர்ச்சி:

இந்த பதிவில் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளை பற்றி கூறலாம் என்று இருந்தேன்.ஆனால் தகவல்களை சரியாக திரட்ட முடியவில்லை.அதில் வேறு சில தகவல்களை பற்றியும் ஆராய வேண்டி உள்ளதால் தகவல்கள் உறுதியான பின்பு அதை வெளியிடுகிறேன்.லிக்குவிட் பாராபின் பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தேன்.அதில் குழந்தைகளுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படும் என்பதை பார்த்தோம்.மேலும் சில அதிர்ச்சி தகவல்களை பற்றி பார்ப்போம்.

சென்ற மாதம் பியுட்டி பார்லர் செல்ல நேர்ந்தது.இதுவரை நான் பேசியல்(அதாங்க முகத்துக்கு சாயம் அடிக்கிறது)செய்தது இல்லை.சரி செய்து தான் பார்ப்போம் என்று போய் உட்கார்ந்து இருந்தேன்.வந்த பெண்மணி என்னுடைய முகத்தில் "pores"(துகள்கள்) திறந்து உள்ளதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.உடம்பு என்று ஒன்று இருந்தால் அதில் துகள்கள் இருக்க தான் செய்யும்.இதனை அடிப்பது என்பது எவ்வுளவு ஆபத்து.நம் உடம்பில் இருக்கும் நீர் பாதி மட்டும் தான் சிறுநீராக செல்லுகின்றது.மீதம் உள்ள நீர் நம்முடைய வேர்வையின் வழியாக தான் செல்கின்றது என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான்.இவ்வாறு இவர்கள் முட்டாள் தனமாக செய்யும் 'பேசியல்லால்' முகத்துக்கு கிடைக்க வேண்டிய சுவாசமும் வெளியேற்ற வேண்டிய கெட்ட நீரும் தங்கி விடுகின்றது.இதனால் தான் நாட்போக்கில் முகத்தின் தோல் கெட்டு விடுகின்றது.அதில் இருந்து பியுட்டி பார்லர் போவது இல்லை.நீங்களும் போனால் காசு குடுத்து வம்பை விலைக்கு வாங்குவதற்கு சமம்.



அடுத்தபடியாக லிக்குவிட் பாராபின் பற்றி பார்ப்போம்.இந்த லிக்குவிட் பார்பினால் மனிதர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் தொடர்ந்து ஒரு இரண்டு மாதம் இதனை உபயோகித்து வந்தால் உங்கள் உடம்பு பார்பதற்க்கு நன்றாகவும் எந்த ஒரு பருக்களோ அல்லது தோலில் உள்ள சுருக்கங்களோ இருக்காது.இது எப்படி பருக்கள் இருந்து வருவதை தடுக்கின்றதோ அது போலவே உங்களுக்கு வேர்க்கும் தன்மையும் குறைந்து இருப்பதை நீங்கள் உணர வேண்டும்.உண்மையில் நம் உடம்பில் வேர்க்காமல் இருந்தால் அது நம் உடம்பில் வெளியேற்ற படவேண்டிய கழிவுகள் தங்கி விடும்.



பாராபின் என்பது மெழுகு.அது உங்கள் தோலில் உள்ள துகள்களில் அடைத்தே இருக்கும்.அதனால் நீங்கள் என்னதான் குளித்தாலும் சுடுதண்ணீரில் ஆவி பிடித்தாலும் உண்மையில் மெழுகு தீயில் மட்டுமே கரையும் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.என்னை பொறுத்தவரை இதனை எப்போதும் உபயோகபடுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.அப்படி உலர் சருமம் உள்ளவர்கள் இரவில் தேங்காய் எண்ணெயோ அல்லது ஆலிவ் எண்ணெயோ தேய்த்து கொள்ளலாம்.அதே போன்று பருக்கள் இருப்பவர்களுக்கு கத்தாழையின் சதை பகுதியை உபயோகிக்கலாம்.இது முக்கியமாக நாம் தெரியாமல் நமது உடம்பிற்கு சில கிரீம்கள் ஒத்து கொள்ளாத போது வரும் அலர்ஜி பருக்களை குணப்படுத்தும்.அடுத்த பதிவில் சோரியாசிஸ் உள்ளவர்கள் உடம்பிற்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் மேற்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

Wednesday, November 10, 2010

சோரியாசிஸ் - ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்:

முன் குறிப்பு :
உங்களுக்கு தெரிந்த யாரவது சோரியாசிஸ்சினால் பாதிக்கபட்டு இருந்தால் என்னுடைய சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்த வெட்பாலை பற்றி தெரிவிக்கவும்.


சென்ற பதிவில் சுருக்கமாக உணவு முறைகளை கூறி இருந்தேன்.இதில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்ன வென்றால் உங்களுக்கு எந்த எந்த உணவு உட் கொண்டால் சோரியாசிஸ் அதிகம் ஆகின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை தவிர்ப்பது மிக்க நல்லது.சோரியாசிஸ் உள்ளவர்கள் நிறைய மருத்துவங்களை பார்த்து இருப்பார்கள்.ஆனால் ஒன்றும் குணம் ஆகி இருக்காது.உண்மையில் இது குணம் ஆவது போல் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.



சோரியாசிஸ் பொறுத்தவரை மெல்ல மெல்ல வந்தாலும் நிரந்தரமாக இருக்கும்.ஆனால் வெட்பாலை நன்றாக குணப்படுத்தி விடும்.பலர் தங்களால் உணவு கட்டுப்பாட்டினை கடைபிடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.ஆனால் உணவு கட்டுப்பாட்டினை கடை பிடிப்பதை தவிர வேறு வழி இல்லை.சாப்பிடுவதற்கு மிகவும் பிடித்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.முடிந்த அளவு உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வாங்காமல் இருக்க வேண்டும்

சித்தாவை பொறுத்தவரை சோரியாசிஸ் குணம் ஆக ஒரே மருந்து இல்லை.அதில் உள்ள தோல் அலர்ஜியை தவிர மற்ற பிரச்சனைகளுக்கு தனி தனியாக மருந்துகளை தருகின்றனர்.நாமளும் இதே போன்று ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக பார்க்கலாம் தற்போது ஆண்மைகுறைவினை பற்றி மட்டும் பார்ப்போம்.



வெட்பாலை தோலில் உள்ள சோரியாசிஸ் மட்டுமே இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.சோரியாசிஸ் தோல் அலர்ஜி மட்டுமே பிரச்சனையாக கருதி விட முடியாது.அவர்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் வரும்.இது ஆரம்ப கால சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு தெரியாது.ஆனால் நாள்போக்கில் இந்த ஆண்மை குறைவு அவர்களுக்கு உண்டாகும்.இதை விட இன்னொரு வருந்த தக்க விஷயம் என்னவென்றால் சிலருக்கு அதிகபட்சமாக பாலின உணர்ச்சிகள் இல்லாமல் இருக்கும்.இது போன்ற பிரச்சனைகளால் கண்ட லேகியங்களை வாங்குகின்றனர்.இந்த மருந்துகள் உண்மையில் செயல் புரிகின்றதோ இல்லையோ நிச்சயமாக பக்க விளைவுகள் ஏற்படுத்தும்.அதனால் இதற்கு மருந்துகள் உபயோகிப்பதை விட யோகா செய்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.வெட்பாலை தோலில் உள்ள சோரியாசிஸ் மட்டுமே இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.



யோகா செய்வதற்கு முன்பு சில விசயங்களை பார்க்க வேண்டும்:

காலை எழுந்தவுடன் யோகா செய்ய உட்கார்ந்து விட கூடாது.முதலில் உங்களை சுற்றி அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.நீங்கள் யோகா செய்யும் போது வேறு யாரும் உங்களை தொந்தரவு செய்யாமல் முடிந்தால் நீங்கள் "நிர்வானா " பாடல்களை(raaga.com முதன் பக்கத்தில் "niravana songs" இதனுள் சென்றால் ஸ்ட்ரெஸ் குறைவதற்கு பாடல் இருக்கும்). கேட்டு கொண்டே யோகா செய்வது உங்களை வேறு எண்ணங்களுக்கு திசை திருப்பாமல் இருக்கும்.சோரியாசிஸ் உள்ள ஆண்களுக்கு இப்போது என்ன மாதிரியான யோகா செய்யலாம் என்று பார்க்கலாம்.



இந்த இரண்டு யோகாவும்(ardha-shalabhasana & bhujangasana_cobra_pose) தொடர்ந்து செய்தால் உண்மையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.காலையில் யோகா செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள் மாலையில் செய்யலாம்.அவசரம் அவரசமாக செய்ய வேண்டாம்.இதனுடன் மன அழுத்தம் குறைவதற்கான யோகாவையும் சேர்த்து கொண்டால் நல்லது.பொதுவான யோகா வரும் பதிவுகளில் பார்க்கலாம்.அடுத்த பதிவில் பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளை பற்றி பார்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...